உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே - Um Paatham Paninthaen

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே

உம்மையன்றி யாரைப்பாடுவேன் – ஏசையா

உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே

பரிசுத்தமே பரவசமே

பரனேசருளே வரம் பொருளே

தேடினதால் கண்டடைந்தேன்

பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் — உம் பாதம்

புது எண்ணெய்யால் புது பெலத்தால்

புதிய கிருபை புது கவியால்

நிரப்பி நிதம் நடத்துகின்றீர்

நூதன சாலேமில் சேர்த்திடுவீர் — உம் பாதம்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்

நெருங்கி உதவி எனக்களித்தீர்

திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்

தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் — உம் பாதம்

என் முன் செல்லும் உம் சமூகம்

எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்

உமது கோலும் உம் தடியும்

உண்மையாய் என்னையும் தேற்றிடுதே — உம் பாதம்

கனிசெடி நீர் நிலைத்திருக்கும்

கொடியாய் அடியேன் படர்ந்திலங்க

கிளை நறுக்கி களை பிடுங்கி

கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் — உம் பாதம்

என் இதய தெய்வமே நீர்

எனது இறைவா ஆருயிரே

நேசிக்கிறேன் இயேசுவே உம்

நேசமுகம் என்று கண்டிடுவேன் — உம் பாதம்

சீருடனே பேருடனே

சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்

சீக்கிரமாய் சேர்த்திடுவீர்

சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் — உம் பாதம்

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே - Um Paatham Paninthaen

Um Paatham Paninthaen

Ennalum Thuthiyae

Ummayanti Yaarai Paaduvaen – Yesayya

Unthan Anbu Ullam Ponguthae

Parisithamae Paravasamae

Paranae Sarulae Varam Porulae

Thedinathaal Kandadainthaen

Paadida Paadalgal Eenthalitheer — Um Paatham

Puthu Ennayaal Puthu Belathaal

Puthiya Kirubai Puthu Kaviyaal

Nirappi Nitham Nadathuginteer

Noothana Salemil Serthiduveer — Um Paatham

Nerukkathilae Ummai Alaithaen

Nerungi Uthavi Enakkalitheer

Thisaikettengum Alainthidaamal

Theeviram Vanthennai Thaanguginteer — Um Paatham

En Mun Sellum Um Samugam

Enakku Alikkum Ilaipaaruthal

Umathu Kolum Um Thadium

Unmayaai Ennayum Thettiduthae — Um Paatham

Kani Sedi Neer Nilaithirukkum

Kodiyaai Adiyaen Padarnthilanga

Kilai Narukki Kalai Pidungi

Kartharar Kaathennai Sutham Seitheer — Um Paatham

En Ithaya Theivamae Neer

Enathu Iraivaa Aaruyirae

Nesikkiraen Yesuvae Um

Nesa Mugam Entu Kandiduvaen — Um Paatham

Seerudanae Perudanae

Siranthu Jolikkum Kodumudiyil

Seekkiramaai Sernthiduveer

Seeyonai Vaanjithu Naadugiraen — Um Paatham